மெட்ரோ நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
கோயம்பேடு,கோயம்பேடில், மெட்ரோ ரயில் நிலைய அலுவலகம் இயங்கி வருகிறது. இங்குள்ள பெண்கள் உதவி மையத்திற்கு, நேற்று மாலை அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடி குண்டு வைத்திருப்பதாக கூறி, இணைப்பை துண்டித்துள்ளார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பின், வெடிகுண்டு இல்லை என, உறுதியானது. எங்கிருந்து அழைப்பு வந்தது என்பது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.