மேலும் செய்திகள்
நடிகை நயன்தாரா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
08-Oct-2025
சென்னை: ஆயிரம்விளக்கு மசூதிக்கு இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். மயிலாப்பூர் காமராஜர் சாலையில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு நேற்று மாலை, இ - மெயில் ஒன்று வந்தது. அதில், ஆயிரம்விளக்கு மசூதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து, போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் உதவியுடன் விரைந்து சென்ற வெடிகுண்டு நிபுணர்கள், தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் எந்தவித வெடிப்பொருட்களும் கிடைக்காததால் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபரின் இ - மெயில் ஐ.டி.,யை பயன்படுத்தி, அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
08-Oct-2025