உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொத்தடிமையாக வேலை: தந்தை மகன் மீட்பு

கொத்தடிமையாக வேலை: தந்தை மகன் மீட்பு

நெரும்பூர், கல்பாக்கம் அடுத்த நல்லாத்துார் ஊராட்சி, பொம்மராஜபுரத்தைச் சேர்ந்த பழங்குடி இனத்தவர்களான அருள், 38, அவரது மகன் லோகேஷ், 15.திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா கர்லம்பாக்கம் பகுதியில், காளியப்பன் என்பவர் இவர்களுக்கு முன்பணம் அளித்து, கரும்பு வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தி உள்ளார்.இது குறித்து, தன்னார்வ நிறுவனத்தினர் அளித்த புகாரின்படி, திருத்தணி கோட்டாட்சியர் தீபா, இவர்களை மீட்டு விசாரித்து, செங்கல்பட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தார்.நெரும்பூர் வருவாய் ஆய்வாளர் சங்கிலிபூதத்தான், நல்லாத்துார் கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலின் ஆகியோர், மீட்கப்பட்டவர்களை நேற்று, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ