குத்துச்சண்டை போட்டியில் குளறுபடி
சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், சென்னையின் பல இடங்களில் நடந்து வருகின்றன. அதன்படி, மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி, கோபாலபுரத்தில் புதிதாக திறந்த அரங்கில் இரு நாட்கள் நடத்தப்பட்டது. இப்போட்டியில், வெற்றி பெற்றவர்களின் அறிவிப்பு உட்பட பல விஷயங்களில் குளறுபடிகள் நடந்திருப்பதாக, மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். பெற்றோர் சார்பில், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் செயலர் குழு உறுப்பினர் சதீஷ் கூறுகையில், ''என் மகன் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றார். இதில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. விதிகளை மீறி போட்டிகளை நடத்தி வருகின்றனர். போதிய அடிப்படை வசதிகளும் இல்லை,'' என்றார்.