மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் இறப்பு
எண்ணுார்: முதல் மாடியில் விளையாடி கொண்டிருந்த தவறி கீழே விழுந்து காயமுற்ற, ஜாய்சன், 4, என்ற சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எண்ணுார், கமலாம்மாள் நகரைச் சேர்ந்தவர் யோபு, 32, ஓட்டுநர். இவரது, இரண்டாவது மகன் ஜாய்சன், 4, தனியார் பள்ளியில், எல்.கே.ஜி., படித்து வந்தார். கடந்த 17ல், வீட்டின் முதல் மாடியில் விளையாடி கொண்டிருந்த போது, தவறி கீழே விழுந்ததில் சிறுவனுக்கு, தலை மற்றும் காதில் காயம் ஏற்பட்டது. உயர் சிகிச்சைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை, சிறுவன் ஜாய்சன் பரிதாபமாக உயிரிழந்தான். எண்ணுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.