உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

 கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டிபுண்ணியம் கிராமத்தைச் சேர்ந்த லிங்கம் மகன் யுவராஜ், 5. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் யூ.கே.ஜி., படித்து வந்தார். ஏப்ரல் 27 மாலை, வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன், கால் இடறி, விவசாய கிணற்றில் தவறி விழுந்தான். சிறுவன் வைத்திருந்த பொம்மை கிணற்றில் மிதப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர், கிணற்றில் குதித்து யுவராஜை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிங்க பெருமாள் கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை