பட்டா வழங்க முகாம்
விருகம்பாக்கம், விருகம்பாக்கம் இந்திரா நகர், தாங்கல் உள்வாய், ஏரிக்கரை உள்ளிட்ட பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இடங்கள் உள்ளன.இப்பகுதிகளில் 3,000த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன், கிரயம் செய்யப்பட்டது.ஆனால், இவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.இதனால், வங்கியில் கடன் பெற முடியாமல் பலர் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், விருகம்பாக்கம் இந்திரா நகரில் பட்டா வழங்க, எம்.எல்.ஏ., பிரபாகரராஜா தலைமையில், மாம்பலம் வட்டாட்சியர் முன்னிலையில், நேற்று முகாம் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களை முகாமில் சமர்ப்பித்தனர்.