உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுவரில் மோதிய கார்

சுவரில் மோதிய கார்

சென்னை, ஓ.எம்.ஆரில் இருந்து கிண்டி நோக்கி வால்வோ சொகுசு கார், நேற்று அதிகாலை அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அடையாறு கேன்சர் மருத்துவமனை அருகில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த காம்பவுன்ட் சுவரில் மோதி நின்றது.ரோந்து போலீசார் விசாரணையில், 25 வயது மதிக்கத்தக்க பெண் காரை ஓட்டி வந்ததும், அவர் போதையில் இருந்ததும் தெரிந்தது. விபத்தால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், காரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை