உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மேம்பாலத்தில் துாங்கியவர் மீது ஏறி இறங்கிய கார்

மேம்பாலத்தில் துாங்கியவர் மீது ஏறி இறங்கிய கார்

தாம்பரம், மேம்பாலத்தில், போதையில் துாங்கியவர் மீது கார் ஏறி இறங்கியதில் அவர் படுகாயமடைந்தார்.தாம்பரம் மேம்பாலத்தில், நேற்று முன்தினம் இரவு, வியாசர்பாடியைச் சேர்ந்த ரமணா, 63, என்பவர், சாலையோரம் படுத்து துாங்கியுள்ளார். அவர் அருகே 'மாருதி ஸ்விப்ட்' கால்டாக்சி கார் ஒன்று நின்றிருந்தது.இதையறியாமல், ஓட்டுநர் காரை எடுத்தபோது, ரமணா மீது ஏறி இறங்கியது. இதில் காயமடைந்தவரை, போலீசார் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, கார் ஓட்டுனரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை