உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெரினா எழிலகம் அருகே தீப்பற்றி எரிந்த கார்கள்

மெரினா எழிலகம் அருகே தீப்பற்றி எரிந்த கார்கள்

சென்னை, அண்ணா சதுக்கம், எழிலகம் அருகே பொதுப்பணித் துறை வளாகத்தின் பின்புறம், உபயோகமற்ற கார்கள், ஜீப்கள் ஏராளமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.நேற்று மாலை, நிறுத்தப்பட்டிருந்த கார்கள், திடீரென தீப்பற்றி எரிந்தன. அப்பகுதியே புகை மண்டலமானது. உடனே திருவல்லிக்கேணி தீயணைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அனைத்தனர். சம்பவ இடத்தில் போடப்பட்டிருந்த குப்பையை யாரோ கொளுத்திவிட்டதே தீ விபத்துக்கான காரணம் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து அண்ணாசதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ