உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  அவசர கால சிகிச்சைக்கு காவேரி கேர் செயலி

 அவசர கால சிகிச்சைக்கு காவேரி கேர் செயலி

சென்னை: அவசர கால சிகிச்சை வழங்கும் வகையில், 'காவேரி கேர்' என்ற செயலியை, காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவசர மருத்துவ சிகிச்சை பெறுவதை எளிமையாக்க, 'காவேரி கேர்' எனும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'கிஸ்ப்ளோ' நிறுவன தலைமை செயலர் அதிகாரி சுரேஷ் சம்பந்தம், காவேரி மருத்துவ குழும நிர்வாக இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர், இந்த செயலியை நேற்று துவக்கி வைத்தனர். இதுகுறித்து, டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: அவசர காலங்களில் ஏற்படும் பதற்றம், குழப்பம், அறிமுகமில்லாத சூழலில், நோயாளிகளுக்கோ, அவர்களுடன் இருப்பவர்களுக்கோ, ஆம்புலன்ஸ் சேவைக்கு தேவையான விபரங்களை தெரிவிப்பது பெரும்பாலும் கடினமானதாக இருக்கும். எனவே, காவேரி மருத்துவமனையின், செயலியில் உள்ள, 'எஸ்.ஓ.எஸ்.,' வசதி, பயனரின் இருப்பிடத்தை ஜி.பி.எஸ்., வாயிலாக தானாகவே கண்டறிந்து இருப்பிடத்திற்கு விரைந்து ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல வழி வகுக்கும். மேலும், வீடியோ வாயிலாக நேரடியாக டாக்டர்களிடமும் ஆலோசனை பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை