பொழிச்சலுாரில் ரூ.25 லட்சத்தில் சிமென்ட் சாலை
பொழிச்சலுார்:பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கியது, பொழிச்சலுார் ஊராட்சி. 15 வார்டுகளை கொண்ட இவ்வூராட்சியில், பல சாலைகள் சீர்குலைந்து போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் உள்ளன.அதுபோன்ற சாலைகளை, பொதுமக்களின் வசதிக்காக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.இந்நிலையில், எல்ல.ராசமாணிக்கம் தெருவில், சீர்குலைந்து போன சாலையை அகற்றி, பல்லாவரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 25 லட்சம் ரூபாய் செலவில், 2,000 அடி துாரத்திற்கு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இதேபோல், மற்ற சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.