உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐ.சி.எப்., ஆலையில் சார்ஜிங் மையம் திறப்பு

ஐ.சி.எப்., ஆலையில் சார்ஜிங் மையம் திறப்பு

சென்னை, ரயில் பெட்டிகள் தயாரிப்பதில், பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., ஆலை முன்னிலையில் இருக்கிறது. இங்கு 8,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், இருசக்கர வாகனத்தையே பயன்படுத்துகின்றனர். ஐ.சி.எப்., வளாகத்தை பசுமையாக்கும் நடவடிக்கையில், முக்கியமாக மின்சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனங்களை ஊழியர்கள், அலுவலர்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், ஐ.சி.எப்., ஆலை வளாகத்தில், இரண்டு இடங்களில் தலா ஒரு சார்ஜிங் மையத்தை, ஐ.சி.எப்., பொதுமேலாளர் சுப்பாராவ் நேற்று துவக்கி வைத்தார். இரு மையங்களிலும், ஒரே நேரத்தில் மூன்று வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை