உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை சங்கமம் திருவிழா  முதல்வர் துவக்கி வைப்பு

சென்னை சங்கமம் திருவிழா  முதல்வர் துவக்கி வைப்பு

கீழ்ப்பாக்கம்,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கலை பண்பாட்டுத்துறைய சார்பில், 'சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழா, நேற்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் திடலில் மாலை துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் உற்சாகமாக முரசு கொட்டி துவக்கி வைத்தார். முதல்வரின் தனிசெயலர்கள், வேட்டி சட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இசையமைப்பாளர் பால் ஜேக்கப் வடிவமைத்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற கலைஞர்கள் பங்கேற்ற கர்நாடக இசை பால்கள், கானா பாடல்கள், பரதநாட்டியம், கரகம், காவடி, புரவியாட்டம், கோலாட்டம் உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து, 'ராப்' இசையில் பரதநாட்டியம் மற்றும் கரகம், காவடி, பறை, கோலாட்டம் ஆடினர். நீலகிரி கோத்தர் நடனம் , பார்வையாளர்களை கவர்ந்தது.பெசன்ட் நகர், எழும்பூர் அருங்காட்சியகம் உள்ளிட்ட 18 இடங்களில், 17ம் தேதி வரை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ