மேலும் செய்திகள்
4வது டிவிஷன் கால்பந்து நாளை துவக்கம்
01-Jun-2025
மெட்ராஸ் போஸ்டல் அணி டிவிஷன் கால்பந்தில் வெற்றி
31-May-2025
RCBயுடன் Finalல் மோத போகும் அணி எது? MI Vs PBKS
01-Jun-2025
சென்னை, சென்னை கால்பந்து சங்கம் சார்பில் ஆடவருக்கான நான்காவது டிவிஷன் கால்பந்து போட்டி, சென்னை, பேசின் பிரிட்ஜ், டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் நடக்கிறது.நேற்று நடந்த முதல் லீக் போட்டியில், சென்னை டைட்டன் அணி - சென்னை சாம்பியன் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில், சென்னை டைட்டன்ஸ் அணி, 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. டைட்டன்ஸ் அணி சார்பில் ரவி 7வது மற்றும் 17வது நிமிடத்தில், அணிக்காக இரண்டு கோல் அடித்து அசத்தினார். கார்த்திக் 30வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். சென்னை சாம்பியன் அணி சார்பில் சுரேந்தர் 40வது நிமிடத்தில், ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார்.இரண்டாவது லீக் போட்டியில், எம்.ஏ.எஸ்., அணி மற்றும் புழல் அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.அடுத்து நடந்த மூன்றாவது போட்டியில், சென்னை ஸ்போர்டிங், உதயநிதி எப்.சி., அணிகளுக்கான போட்டியும் 1 - 1 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிந்தது. உதயநிதி அணி சார்பில் கவுரி 8வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.சென்னை ஸ்போர்டிங் சார்பில் சந்தோஷ்குமார் 34வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மற்றோரு போட்டியில் ஷாடோ எப்.சி., அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் ஜெகு எப்.சி., அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
01-Jun-2025
31-May-2025
01-Jun-2025