உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சாரம் பாய்ந்து குழந்தை காயம்

மின்சாரம் பாய்ந்து குழந்தை காயம்

வியாசர்பாடி: மின்சாரம் பாய்ந்து, 4 வயது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. வியாசர்பாடி, ஜெ.ஜெ.ஆர்., பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்; துாய்மை பணியாளர். இவருக்கு, தேஜஸ் என்ற 10 வயது மகனும், தனுஸ்ரீ என்ற நான்கு வயது மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், வீட்டில் தனுஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, வீட்டில் அறுந்து தொங்கிய மின் ஒயரை தெரியாமல் பிடிக்கவே, மின்சாரம் பாயந்துள்ளது. இதில் தனுஸ்ரீயின் இடது உள்ளங்களையில் காயம் ஏற்பட்டது. பெற்றோர் குழந்தையை மீட்டு, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து எம்.கே.பி., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை