உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி கழுவிய கிளீனர் மின்சாரம் பாய்ந்து பலி

லாரி கழுவிய கிளீனர் மின்சாரம் பாய்ந்து பலி

மணலிபுதுநகர்,உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் பிரகாஷ் யாதவ், 40; லாரி கிளீனர். இவர், நேற்று காலை மணலிபுதுநகர் அடுத்த, வெள்ளாங்குளம், ஆக்டோபஸ் லாரி யார்டில், 40 அடி டிரெய்லர் லாரியை கழுவிக் கொண்டிருந்தார்.அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். இது குறித்து '108' ஆம்புலன்சுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஆம்புலன்சில் வந்த மருத்துவ ஊழியர் ராம் பிரகாஷ் யாதவை பரிசோதித்து பார்த்ததில், அவர் உயிரிழந்தது தெரியவந்தது.மணலிபுதுநகர் போலீசார் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ