உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமண மோசடி கோவை நபர் கைது

திருமண மோசடி கோவை நபர் கைது

ஆவடி பூந்தமல்லி, கரையான்சாவடியைச் சேர்ந்தவர் ஜெஸ்ஸி, 34. இவர், மேட்ரிமோனியில் திருமணத்திற்காக பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. அதன் வாயிலாக, கோயம்புத்துாரைச் சேர்ந்த, லெனின் மோகன், 34, என்பவர் அறிமுகமாகியுள்ளார்.அவர், திருமணம் ஆசை வார்த்தைகள் கூறி, ஜெஸ்ஸியிடம் 3 லட்சம் ரூபாய் வரை வாங்கி ஏமாற்றியுள்ளார். இது குறித்து இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, லெனின் மோகனை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.லெனின் மோகன் திருமண மேட்ரிமோனி பக்கங்களில் கணக்கு துவங்கி, விவாகரத்து பெற்ற பெண்கள் மற்றும் கணவரை இழந்த பெண்களை குறிவைத்து, பல கோடி மோசடி செய்தது விசாரணையில் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ