உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு ஒப்படைப்பதில் தாமதம் மனு தாரர்களுக்கு இழப்பீடு

வீடு ஒப்படைப்பதில் தாமதம் மனு தாரர்களுக்கு இழப்பீடு

சென்னை, அண்ணா நகரில் 'தி மெட்ரோசோன்' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அதில், யு.டி.எஸ்., எனும் அடுக்குமாடி குடியிருப்புகளின் திட்டங்களில், ஒவ்வொரு குடியிருப்பின் உரிமையாளருக்கும் நிலத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பங்கு சட்டப்பூர்வமான சொத்தாகும்.யு.டி.எஸ்., வகையில் இரண்டு வீடுகள் வாங்க, தலா 20.04 லட்சம் ரூபாயை கே.சங்கர் என்பவர், 2016ல் செலுத்தினார்.இதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டுமான பணிக்கான தொகையில், தலா, 43.31 லட்ச ரூபாயை, அவர் வங்கிக்கடன் வாயிலாக செலுத்தினார். இத்திட்டத்தில், 2019ல் வீடு ஒப்படைக்கப்படும் என, கட்டுமான நிறுவனம் உறுதியளித்து இருந்தது.ஆனால், குறிப்பிட்ட காலத்தில் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து கே.சங்கர், ரியல் எஸ்டேட் ஆணையத்தில், 2013ல் இரண்டு வழக்குகள் தொடர்ந்தார்.இந்த வழக்குகள் தொடர்பாக, ஆணையத்தின் விசாரணை அலுவலர் என்.உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:இரண்டு வீடுகள் வாங்க பணம் செலுத்தியதில், கட்டுமான நிறுவனம் உரிய காலத்தில் வீட்டை ஒப்படைக்கவில்லை என்பது உறுதியாகிறது. எனவே, இரண்டு வழக்கிலும் கட்டுமான நிறுவனம், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு, தலா 5 லட்ச ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவுக்காக தலா, 25,000 ரூபாய் அளிக்க வேண்டும்.உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, 90 நாட்களுக்குள் இத்தொகையை கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை