உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆபாச கருத்து பதிவிட்ட தி.மு.க., நிர்வாகி மீது புகார்

ஆபாச கருத்து பதிவிட்ட தி.மு.க., நிர்வாகி மீது புகார்

மதுரவாயல்,வளசரவாக்கம் மண்டலம், 145வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலராக இருப்பவர் சத்தியநாதன். இவர், கடந்த வாரம் நொளம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், தன் வார்டில் உள்ள கிராமநத்தம் பட்டா வழங்க வேண்டும் என, கையில் மணி அடித்தவாறு நுாதன முறையில் மனு அளித்தார்.இதை, அவருடன் வந்த சுரேஷ் என்பவர் வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். இந்நிலையில், அந்த வீடியோவின் கமென்ட்டில், 145வது வார்டு தி.மு.க., நிர்வாகி ஒருவர் ஆபாசமான முறையில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, கவுன்சிலர் சத்யநாதன் அளித்த புகாரை அடுத்து, கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி