மகனை கடத்தியதாக கணவர் மீது புகார்
சென்னை:அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் பிரசன்னா மற்றும் திவ்யா தம்பதி. இவர்களுக்கு 9 வயதில் மகன் உள்ளார். இத்தம்பதிக்கு, சில மாதங்களுக்கு முன் அமெரிக்க நாட்டின் நீதிமன்றம், விவாகரத்து வழங்கியதாகவும், குழந்தையை இருவரும் மாறி மாறி வைத்துக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் திவ்யா, குழந்தையுடன் சென்னை வந்துள்ளார். பின், இம்மாதம் முதல் வாரத்தில், குழந்தையை பிரசன்னாவின் உதவியாளர் கோகுல கிருஷ்ணன் என்பவரிடம் கொடுத்து அனுப்பி உள்ளார்.ஆனால், மீண்டும் குழந்தையை திவ்யாவிடம் ஒப்படைக்கவில்லை. இதனால், திருமங்கலம் காவல் நிலையத்தில் திவ்யா புகார் அளித்தார்.வழக்கு பதிவு செய்த போலீசார், குழந்தையை வாங்கிச் சென்ற கோகுலகிருஷ்ணனை, பெங்களூருவில் கைது செய்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், 'போலீசார் தன்னிடம் 25 லட்சம் ரூபாய் கேட்டனர்' என, பிரசன்னா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.