புகார் பெட்டிசேப்பாக்கம் பெல்ஸ் சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பு@
சேப்பாக்கம் பெல்ஸ் சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பு
தேனாம்பேட்டை மண்டலம், சேப்பாக்கம் பெல்ஸ் சாலையில், 40க்கும் மேற்பட்ட பழைய இருசக்கர வாகன விற்பனை கடைகள் உள்ளன. இந்த வாகனங்கள், நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தி வைத்துள்ளனர்.இதனால், பாதசாரிகளுக்கென அமைக்கப்பட்ட நடைபாதையை, பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.ஏற்கனவே, கிண்டியில் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், சாலையில் நடந்து சென்ற கல்லுாரி மாணவியர் மூவர் மீது, குடிநீர் வாரிய லாரி மோதி உயிரிழந்தனர்.மேலும், அதுபோல் உயிரிழப்பு ஏற்படும் முன், நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரமேஷ், சேப்பாக்கம்.