உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழைநீர் வடிகால்வாய் பணி முடியாததால் கொன்னுார் நெடுஞ்சாலையில் நெரிசல்

மழைநீர் வடிகால்வாய் பணி முடியாததால் கொன்னுார் நெடுஞ்சாலையில் நெரிசல்

ஐ.சி.எப். :அண்ணா நகர் மண்டலத்தில், வில்லிவாக்கத்தில் இருந்து, அயனாவரத்தை நோக்கி செல்லும் கொன்னுார் நெடுஞ்சாலை உள்ளது.இதில், ஐ.சி.எப்., - அயனாவரம் சாலையில், கம்பர் அரங்கத்தின் எதிரே, குறிப்பிட்ட துாரம் மட்டும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை, மாநகராட்சி கடந்த பிப்., முதல் வாரத்தில் துவங்கியது.இதனால், 100 மீட்டருக்கு மேல், சாலை ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டுள்ளதால், ஒரே பாதியில், பேருந்துகள், கனரகம் என, அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் கூறியதாவது:மழைநீர் வடிகால்வாய் பணிக்காக, குறிப்பிட்ட துாரம் ஒரு வழிபாதையாக மாற்றியதால், நான்கு மாதங்களாக ஐ.சி.எப்., - அயனாவரம் கொன்னுார் நெடுஞ்சாலை பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக தெரிகிறது. மீதமுள்ள பணிகளை விரைவாக முடித்து, சாலையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி