மேலும் செய்திகள்
திருப்போரூர் கந்த சஷ்டி விழா ஆலோசனை கூட்டம்
18-Oct-2025
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில் நடக்க உள்ள சூரசம்ஹார விழா ஏற்பாடுகள் குறித்து நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. குன்றத்துாரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, 27ம் தேதி சூரசம்ஹாரமும், 28ம் தேதி திருக்கல்யாண உத்சவமும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுகளில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். எனவே, நெரிசல், அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், அரசு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா வரவேற்றார். வருவாய், காவல், தீயணைப்பு, சுகாதாரம், நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். ஆம்புலன்ஸ், குடிநீர், கழிப்பறை, சிறப்பு பேருந்து உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த ஆலோசிக்கப்பட்டது. கோவில் அறங்காவலர்கள் சரவணன், குணசேகர், சங்கீதா கார்த்திகேயன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
18-Oct-2025