தொடர்ச்சி
தண்டையார்பேட்டை வி.எஸ்., மருத்துவமனை சார்பில், உலக இதய தினத்தையொட்டி, விழிப்புணர்வு நடைபயணம் நேற்று நடந்தது. மருத்துவமனை தலைவர் டாக்டர் சுப்பிரமணியன், மருத்துவ இயக்குநர் சுந்தர், செயலாக்க இயக்குநர் முத்து சுப்பிரமணியன், மருத்துவமனை குழும தலைமை இயக்க அதிகாரி பிரசன்னா சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில், முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திர பாபு, 4 கி.மீ., நடைபயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வயது வித்தியாசம் இன்றி அனைவரும் உடற்பயிற்சியை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். உடற்தகுதிக்காக நாம் எடுக்கும் சிறிய, தொடர்ச்சியான முயற்சிகள், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும், நல்வாழ்விலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.