உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கால்வாயில் சிக்கிய பசு மீட்பு

கால்வாயில் சிக்கிய பசு மீட்பு

அம்பத்துார்: அம்பத்துார், கள்ளிக்குப்பம் சர்வீஸ் சாலை அருகே, திறந்தவெளி மழைநீர் கால்வாய் உள்ளது. நேற்று இரவு 7:00 மணிக்கு, இந்த கால்வாயில் பசு மாடு சிக்கியது. அப்பகுதியினர், பசுவை மீட்க போராடினர்.முடியாததால், அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்தனர். அவர்கள், பசுவின் வயிற்றைச் சுற்றி இரு பெல்ட் கட்டி, பொக்லைன் இயந்திரம் வாயிலாக பசுவை, கால்வாயில் இருந்து மீட்டனர். 45 நிமிடங்கள் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட பசு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி