உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரிக்கெட் லீக் மின்வாரிய அணி வெற்றி

கிரிக்கெட் லீக் மின்வாரிய அணி வெற்றி

சென்னை, தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடக்கின்றன. இதில், பி.எஸ்.என்.எல்., சென்னை மற்றும் தமிழக மின் வாரிய அணிகள் மோதிய ஐந்தாவது டிவிஷன் 'டி' பிரிவு ஆட்டம், ஆவடி ஓ.சி.எப்., மைதானத்தில் நடந்தது. முதலில் விளையாடிய பி.எஸ்.என்.எல்., சென்னை அணி, 36.6 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 163 ரன்கள் அடித்தது. அடுத்து பேட்டிங் செய்த தமிழக மின் வாரிய அணி, 30.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு, 165 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில், சென்னை 'பி அண்டு டி' ஆடிட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில், எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு, 143 ரன்களை அடித்தது. அடுத்து விளையாடிய பிரீ லான்சர்ஸ் சி.சி., அணி, 34.1 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 121 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி