உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர் -

கூலி தொழிலாளி மர்ம மரணம் வியாசர்பாடி: வியாசர்பாடி, கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தாஸ், 46. மது போதையில் வியாசர்பாடி பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தில் நேற்று மதியம் படுத்திருந்தார். காவலாளி சங்கர், அவரை எழுப்ப முயன்ற போது இறந்து கிடப்பது தெரிய வந்தது. சடலத்தை மீட்ட போலீசார், தாஸ் கொலை செய்யப்பட்டாரா அல்லது அதீத மது போதையில் இறந்தாரா என விசாரிக்கின்றனர். 10 கிலோ கஞ்சா பறிமுதல் தரமணி: தரமணி, சி.எஸ்.ஐ.ஆர்., சாலையில் பையுடன் சுற்றி வந்த இருவரை போலீசார் பிடித்தனர். பையில் 10 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த முபாரக் ஹுசைன், 25, அமன் மியா, 23, என்பதும், வடமாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரும், நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைக்கப்பட்டனர். ரூ.59 லட்சம் கஞ்சா அழிப்பு சென்னை: சென்னையில், 111 போதை பொருட்கள் வழக்குகளில் 59 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 590 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இவை, நீதிமன்ற உத்தரவின்படி, செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள 'ஜி.ஜே.மல்டிகிளேவ் இந்தியா' என்ற தனியார் நிறுவனத்தில், தீயிட்டு அழிக்கப்பட்டன. சிறுமியிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ எம்.கே.பி.நகர்: வியாசர்பாடியைச் சேர்ந்த பிளஸ் 1 பயிலும் 15 வயது சிறுமி, தாத்தா, பாட்டியுடன் வசிக்கிறார். வீட்டருகே வசிக்கும் மணிகண்டன், 26, என்பவர், சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார். சிறுமியின் குடும் பத்தினர் அளித்த புகாரையடுத்து எம்.கே.பி.நகர் மகளிர் போலீசார் விசாரித்து, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில், மணிகண்டனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !