உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவியின் செயின் மாயம்

மாணவியின் செயின் மாயம்

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் அடுத்த, சீவரம் பகுதியைச் சேர்ந்தவர் கிரண், 36. இவரது 3 வயது மகள், பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிரி - கே.ஜி., வகுப்பில் பயில்கிறார். இரண்டு நாட்களுக்கு முன், மாணவி அணிந்திருந்த 2.5 சவரன் தங்கச் செயின் வகுப்பறையில் மாயமானது. மூன்று ஆசிரியையர், மாணவியை தனியாக அழைத்துச் சென்று கொஞ்சியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூன்று ஆசிரியையரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ---- பெண்ணிற்கு பாலியல் தொல்லை மயிலாப்பூர்: மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த, 19 வயது பெண், அதே பகுதியில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார். சாந்தோம் பேருந்து நிறுத்தத்தில், இம்மாதம் 5ல் தன் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த மர்ம நபர், அப்பெண்ணிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்து தப்பினார். மயிலாப்பூர் போலீசார் விசாரித்து, பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த மதன், 39, என்பவரை, நேற்று கைது செய்தனர். --- ஓட்டுநரிடம் பணம் பறிப்பு பெரியமேடு: புதுவண்ணாரப்பேட்டை, பர்மா காலனியைச் சேர்ந்தவர் சந்துரு பாண்டியன், 51; ஆட்டோ ஓட்டுநர். 4ம் தேதி இரவு, சவாரி முடித்து வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக வந்த ஆட்டோவை, இருவர் வழிமறித்தனர். கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து 2,000 ரூபாயை பறித்து தப்பினர். பிடிக்க வந்த மக்கள் மீது கற்கள் வீசிச்சென்றனர். பெரியமேடு போலீசார், ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பழைய வண்ணாரப்பேட்டை உதயன், 22, என்பவரை நேற்று கைது செய்தனர்; மற்றவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ