க்ரைம் கார்னர்: மாமூல் வாங்கிய ரவுடி கைது
கொளத்துார்: கொளத்துார் 200 அடி சாலை மகாத்மா காந்தி நகரில், டிபன் கடை நடத்தி வருபவர் மணி, 60. சமீபத்தில் இவரது கடைக்கு வந்த ஆதிகேசவன், 23 என்ற ரவுடி, 'ஓசி'யில் உணவு சாப்பிட்டு, பணம் தராமல் சென்றுள்ளார். நேற்று காலையும் உணவு சாப்பிட்டுவிட்டு, மிரட்டி கல்லாவில் இருந்த 300 ரூபாயை எடுத்து சென்றார். விசாரித்த கொளத்துார் போலீசார், ஆதிகேசவனை கைது செய்தனர்.ஸ்டீல் பட்டறை ஊழியரை தாக்கியவர் கைது கொருக்குப்பேட்டை: கொருக்குப்பேட்டை, டி.கே.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுமன், 36; ஸ்டீல் பட்டறை தொழிலாளி. இவர், கொருக்குப்பேட்டை, மன்னப்பன் தெரு வழியே நேற்று நடந்து சென்றபோது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்சாய், 28 என்பவர் சுமனை வழிமறித்து, 'என் மனைவியிடம் ஏன் பேசுகிறாய்' என கேட்டு, தகராறு செய்து சரமாரியாக தாக்கி தப்பினார். காயமடைந்த சுமனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரித்த கொருக்குப்பேட்டை போலீசார், சதீஷ்சாயை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.