உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர்

குட்டை நீரில் மூழ்கி வாலிபர் பலி ஆவடி: அம்பத்துார் அடுத்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 25, ஆரிக்கம்பேடு, செல்வி நகர் பகுதியில் உள்ள குட்டையில், கடந்த 17ம் தேதி குளித்தார். நீரில் மூழ்கி இறந்த நிலையில், அவரது சடலத்தை நேற்று மீட்ட ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். 'போக்சோ' சிறை -- கைதி உயிரிழப்பு புழல்: திருத்தணி போலீசாரால் 'போக்சோ' வழக்கில் கைது செய்யப் பட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த பெருமாள், 58, என்பவர், கடந்த 16ம் தேதி முதல் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார் . -- ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி மாம்பலம்: சைதாப்பேட்டை - மாம்பலம் இடையே நேற்று முன்தினம் இரவு, அடையாளம் தெரியாத நபர், தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, அவ் வழியாக வந்த மின்சார ரயிலில் அடிபட்டு, கால்கள் துண்டாகி, சம்பவ இடத்திலேயே பலியானார். மாம்பலம் ரயில்வே போலீசார், அடையாளம் தெரியாத நபர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ