மேலும் செய்திகள்
சென்னையில் போலீசாரை தாக்கியவருக்கு 'காப்பு'
1 hour(s) ago
போலீசாரை தாக்கியவருக்கு 'காப்பு' ஓட்டேரி: ஓட்டேரி, ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில், கடந்த 20ம் தேதி மது போதையில் இருந்த இருவர், போலீசாரை தாக்கி தப்பினர். இந்த வழக்கில், ஓட்டேரியைச் சேர்ந்த முஸ்தபா, 26, என்பவரை, ஓட்டேரி போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர். ரவுடியை வெட்டிய 7 பேர் கைது தாம்பரம்: மேற்கு தாம்பரம், காதர்பாய் தெருவைச் சேர்ந்தவர் சீனி முகமது, 32; ரவுடி. தீபாவளியன்று இரவு ஆறு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் இவரை வெட்டி தப்பினர். வழக்கு பதிந்த தாம்பரம் போலீசார், மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த செஷான், 25, இரும்புலியூரைச் சேர்ந்த கிரி, 25, உள்ளிட்ட ஏழு பேரை, நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர். வீடு புகுந்து தாக்கிய போதை ஆசாமி கோயம்பேடு: நெற்குன்றம், ஜெயராம் நகரைச் சேர்ந்தவர் ராஜ் கண்ணன், 22; மளிகை கடை ஊழியர். நேற்று முன்தினம் அதிகாலை, இவரது வீட்டில் மது போதையில் நுழைந்த அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், 28, என்பவர் வீண் தகராறு செய்து ராஜ் கண்ணனை தாக்கியுள்ளார். விசாரித்த போலீசார், கார்த்திகேயனை நேற்று கைது செய்தனர். சகோதரர்களை வெட்டியவர் கைது ஓட்டேரி: ஓட்டேரி, செல்லப்பா தெருவைச் சேர்ந்தவர் வசந்தராஜ், இவரது அண்ணன் நாகராஜ். இருவரையும் முன்விரோதம் காரணமாக கத்தியால் வெட்டிய வழக்கில், புளியந்தோப்பு கே.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன், 21, என்ற ரவுடியை, ஓட்டேரி போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். வீடு புகுந்து வெள்ளி பொருள் திருட்டு கொடுங்கையூர்: கொடுங்கையூர், முத்தமிழ் நகர் 3வது பிளாக்கைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார், 30; தனியார் நிறுவன ஊழியர். தீபாவளி பண்டிகையொட்டி, குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று, நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வெள்ளி பொருட்கள், இரண்டு லேப்டாப்கள், 7,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர். மாணவிக்கு பாலியல் தொல்லை எம்.கே.பி.நகர்: கொடுங்கையூரை சேர்ந்தவர் 17 வயது கல்லுாரி மாணவி. நேற்று கொடுங்கையூரில் உள்ள தோழி வீட்டிற்கு சென்று, பின் வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது, அவ்வழியே வந்த மர்ம நபர் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து விசாரித்த எம்.கே.பி.நகர் போலீசார், கொடுங்கையூர், கண்ணதாசன் நகரை சேர்ந்த விக்ரம், 22, என்பவரை கைது செய்தனர்.
1 hour(s) ago