மேலும் செய்திகள்
பெண்ணிடம் செயின் பறித்த மூவர் கைது
05-Oct-2025
விபத்தில் வாலிபர் உயிரிழப்பு தாம்பரம்: மேற்கு தாம்பரம், சிவில் லேன் பகுதியைச் சேர்ந்தவர் உலகானந்தன், 48; முன்னாள் ராணுவ வீரர். இவர், நேற்று காலை, புறவழிச்சாலையில் மேற்கு தாம்பரம் அருகே சைக்கிளில் சென்றபோது, 'பேஷன் புரோ' பைக்கில் வந்த, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன், 25, என்பவர், உலகானந்தன் மீது மோதினார். இதில், பலத்த காயமடைந்த கார்த்திகேயன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உலகானந்தன் படுகாயம் அடைந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். ஓட்டுநரிடம் மொபைல் போன் பறிப்பு வியாசர்பாடி: வியாசர்பாடி, சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ரவி, 41; டாடா ஏஸ் வாகன ஓட்டுநர். சாஸ்திரி நகரில் நேற்று முன்தினம் இரவு சென்று வீட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, 'டியோ' ஸ்கூட்டரில் பின் தொடர்ந்த இருவர், ரவியின் 16,000 ரூபாய் மதிப்பிலான போனை பறித்து தப்பிச் சென்றனர். எம்.கே.பி., நகர் போலீசார் விசாரிக்கின்றனர். ரூ.18 லட்சம் மோசடி செய்தவர் கைது அயனாவரம்: அயனாவரத்தைச் சேர்ந்த 27 வயது பெண்ணை 10 ஆண்டுகளாக காதலித்து வந்த, நெற்குன்றத்தைச் சேர்ந்த பாலாஜி, 29, என்பவர், கடந்த 2023ல் திருமண ஆசை காட்டி, தொழில் துவங்க பணம் கேட்டார். அப்பெண்ணின் குடும்பத்தினர் வங்கியில் கடன் பெற்று, 18 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். அதன்பின் திருமணம் செய்ய பாலாஜி மறுத்துள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, பாலாஜியை நேற்று கைது செய்தனர். போனை விற்று தராத பெண்ணுக்கு வெட்டு புளியந்தோப்பு: அயனாவரத்தைச் சேர்ந்தவர் லதா, 55. இவரது நண்பர் பார்த்திபன், 23, ஸ்ரீராம், 22, ஆகியோர் நேற்று அதிகாலை பைக்கில் லதா வீட்டுக்கு சென்று திருடிய மொபைல் போனை விற்றுத் தருமாறு கேட்டுள்ளனர். இதற்கு லதா மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த பார்த்திபன் கத்தியால் லதாவை சரமாரியாக வெட்டி, அவரது ஸ்கூட்டரை பெட்ரோல் ஊற்றி எரித்து சென்றார். ஓட்டேரி போலீசார் பார்த்திபன் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீராமை தேடி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து 'ஏசி' மெக்கானிக் பலி மாங்காடு: மாங்காடு, நரிவனம் பகுதியில் சீதா என்பவரது வீட்டின் கிரகபிரவேச விழா, நேற்று காலை நடந்தது. இவரது வீட்டில் 'ஏசி' பொருத்தும் பணியில் திருவேற்காடைச் சேர்ந்த 'ஏசி' மெக்கானக்கான பாலாஜி, 25, என்பவர், ஊழியர்களுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது, வீட்டின் அருகே தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின்சார கம்பி, எதிர்பாராத விதமாக உரசியதில், பாலாஜி சம்பவ இடத்திலேயே பலியானார். இரண்டு ஊழியர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர். திருமண மண்டபத்தில் திருடியவர் கைது பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் உள்ள 'ஆர்னா மகாலில்' சில தினங்களுக்கு முன் நடந்த திருமணம் ஒன்றில், தங்க நகை திருடு போனது. விசாரித்த பள்ளிக்கரணை போலீசார், திருட்டில் ஈடுபட்ட பள்ளிக்கரணையைச் சேர்ந்த ராஜாகோபாலன், 39, என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து, 8 சவரன் மற்றும் 5 சவரன் செயின்கள் மற்றும் மூன்று கிராம் தங்க நாணயம் பறிமுதல் செய்தனர். வீடு புகுந்து நகை திருடியவர் கைது வில்லிவாக்கம்: வில்லிவாக்கம், சிட்கோ நகர் 56வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன், 45. ஜூலை 15ம் தேதி இரவு இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், ஜெயராமனின் செயின், மோதிரம் உள்ளிட்ட 3 சவரன் நகைகள், மொபைல் போனை திருடி தப்பினார். விசாரித்த வில்லிவாக்கம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட ரெட்ஹில்ஸ் முதல் தெருவைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 33, என்பவரை கைது செய்து, திருடிய பொருட்களை மீட்டனர். 6 கிலோ கஞ்சா பறிமுதல் பூந்தமல்லி: பூந்தமல்லி, கரையான்சாவடி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிபுல் புரகோகைன், 26, என்பவரை பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று கைது செய்து, 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கெட்டுபோன ஸ்வீட்: கடை மீது புகார் கீழ்ப்பாக்கம்: ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்தவர் மணிகண்டன், 35; வழக்கறிஞர். இவரது வீட்டில் விசேஷம் என்பதால், கடந்த 28ம் தேதி, கீழ்ப்பாக்கம், ஆம்ஸ் சாலையில் உள்ள ஸ்வீட் கடையில், இனிப்பு வாங்கியுள்ளார். அதை சாப்பிட்ட சிறுவர்கள், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மண்கண்டன் நேற்று, ஸ்வீட் கடையை அணுகி கேட்டபோது, முறையாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்துள்ளார். இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். 'போக்சோ' குற்றவாளி சிக்கினார் திருவொற்றியூர்: திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசாரால், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது நபர், 2025 ஜூலை, 24 முதல், விசாரணைக்கு ஆஜராகாமல், 'டிமிக்கி' கொடுத்து வந்துள்ளார். நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததை அடுத்து, திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார், தலைமறைவாக இருந்த நபரை, நேற்று கைது செய்தனர். நள்ளிரவில் கார் தீக்கிரை மறைமலை நகர்: பூந்தமல்லியைச் சேர்ந்தவர் நிர்மல்குமார், 35. நேற்று முன்தினம் இரவு, குடும்பத்துடன் 'டாடா ஜெஸ்ட்' காரில் காட்டாங்கொளத்துார், சிவானந்தா குருகுலம் அருகில் சென்றபோது, காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்துள்ளது. சுதாரித்து, அனைவரும் காரில் இருந்து வெளியேறினர். தகவலறிந்து வந்த மறைமலை நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் மறைமலை நகர் போலீசார் தீயை அணைத்தனர். அதற்குள் கார் தீக்கிரயைானது.
05-Oct-2025