உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாடு முட்டி சிறுமி பலத்த காயம்

மாடு முட்டி சிறுமி பலத்த காயம்

நந்தம்பாக்கம்: நந்தம்பாக்கம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த மாரியப்பனின் 2 வயது பெண் குழந்தை, பாட்டி குத்தாலம்மாவுடன் நேற்று கடைக்கு சென்று கொண்டிருந்தது. நந்தம்பாக்கம், குளக்கரை தெருவில் நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த மாடு, சிறுமியை முட்டி துாக்கி வீசியது. அப்பகுதிமக்கள், மாட்டை துரத்தி, பலத்த காயமடைந்த சிறுமியை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியை முட்டிய மாட்டை, மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, கோசாலை எனும் மாடுகள் பராமரிக்கும் இடத்தில் அடைத்தனர். -- தண்ணீர் லாரி மோதி ஒருவர் பலி பூந்தமல்லி: குன்றத்துார் அருகே அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம், 50; 'ஆன்லைன்' டெலிவரி பொருட்கள் ஊழியர். நேற்று முன்தினம் இரவு, பூந்தமல்லி - குன்றத்துார் சாலை, குமணன்சாடி பகுதியில் பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த குடிநீர் லாரி மோதியது. பலத்த காயமடைந்த வேலாயுதம் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆவடி போக்குவரத்து போலீசார், காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் அய்யாவு, 54, என்பவரை கைது செய்தனர். -- தலைமறைவு குற்றவாளி கைது அண்ணா நகர்: அண்ணா நகர் பகுதியில், 2022 ஜனவரியில் நடந்த கொலை முயற்சி வழக்கில், ஜோஸ்வாராய் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வந்த அவர் தலைமறைவானார். சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 21வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. அண்ணாநகர் போலீசார், ஆயிரம் விளக்கு பகுதியில் பதுங்கியிருந்த ஜோஸ்வாராய், 20, என்பவரை கைது, நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைர்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ