துாய்மை பணியாளர் இறப்பு
அண்ணாசாலை: காசிமேடு, ஜீவரத்தினம் நகரைச் சேர்ந்த சத்யா, 42, என்ற பெண், ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் துாய்மை பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார். அங்குள்ள கழிப்பறையை சுத்தம் செய்துபோது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.