பெண் துாய்மை பணியாளர் பலி
குன்றத்துார் அடுத்த மூன்றாம் கட்டளையைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 58; கிண்டியில் உள்ள ஒலிம்பியா டெக்பார்க்கில் துாய்மை பணியாளர். நேற்று முன்தினம் இரவு, பணி முடித்து பரங்கிமலை பால்வெல் சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த மோதி பலத்த காயமடைந்து, உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய கிண்டி, லேபர்காலனியை சேர்ந்த பரசுராமை, 34, போலீசார் நேற்று கைது செய்தனர். 'ஏசி'யில் காப்பர் கம்பிகள் திருட்டு தாம்பரம்: தாம்பரம், சுந்தரம் காலனியைச் சேர்ந்த ஜெயந்த் என்பவரின் வீட்டில், 'ஏசி'யின் காப்பர் கம்பிகளை, நேற்று முன்தினம், மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதேபோல், அப்பகுதியில் பல வீடுகளில் 'ஏசி' காப்பர் வடம் தொடர்ந்து திருடப்படுவதால, தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.