உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பள்ளி வளாகத்தை ஒட்டி தேங்கும் கழிவுநீரால் ஆபத்து

 பள்ளி வளாகத்தை ஒட்டி தேங்கும் கழிவுநீரால் ஆபத்து

மடிப்பாக்கம்: பெருங்குடி மண்டலம் மடிப்பாக்கம் குளக்கரை தெருவில், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை, 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாக மதில் சுவரை ஒட்டி குளக்கரை சாலையில், மனித கழிவுகளுடன் கூடிய கழிவுநீர் தேங்கி நிற்கிறது. பல மாதங்களாக தொடரும் இந்த பிரச்னையால், பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியர் அடிக்கடி உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர். பள்ளி கழிப்பறையில் இருது வெளியேறுவதாக கூறப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியேறவில்லை என்பதை பள்ளி நிர்வாகம் உறுதிசெய்தது. இதனல், கழிவுநீர் எங்கிருந்து வெளியேறுகிறது என்பது மர்மமாக உள்ளது. இதற்கு தீர்வு காணாமல், மாநகராட்சி அதிகாரிகளும் அலட்சியமாக உள்ளனர். அதுமட்டுமல்லாமல், வளாகத்தை ஒட்டி நிற்கும் மின்மாற்றியை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால், எந்நேரமும் விபத்து அபாயம் உள்ளது. எனவே, நிலைமை விபரீதமாகும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ