உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 46 சாலைகள் சீரமைக்க முடிவு

46 சாலைகள் சீரமைக்க முடிவு

சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலம், 198, 199வது வார்டு, காரப்பாக்கம், சோழிங்கநல்லுார் பகுதியில், பல தெருக்கள் சேதமடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளன.இதையடுத்து, 4.7 கி.மீ., துாரத்தில், 30 தெருக்களில் தார் சாலை மற்றும் 1.4 கி.மீ., துாரத்தில், 16 தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்க மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது. இதற்கான நிதியை ஒதுக்கி, விரைவில் சாலை பணி துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.அதேபோல், ஓ.எம்.ஆர்., மற்றும் இ.சி.ஆரில், 16 'அம்மா' உணவகங்கள் உள்ளன. இதில், பல உணவகங்கள் மிகவும் சேதமடைந்து உள்ளன.மேலும், பாத்திரங்கள், குடிநீர் குழாய், கூரை, மேஜை புதுப்பிக்க வேண்டி உள்ளது. இதற்காக, 1.24 கோடி ரூபாய் மாநகராட்சி ஒதுக்கி உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ