உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பெண்கள் ஜிம்மில் யோகா மையம் அமைக்க முடிவு

 பெண்கள் ஜிம்மில் யோகா மையம் அமைக்க முடிவு

கிண்டி: கிண்டியில் உள்ள மாநகராட்சி பெண்கள் உடற்பயிற்சி கூடத்தில், யோகா மையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. அடையாறு மண்டலம், 172வது வார்டு, கிண்டி எம்.ஜி.ஆர்., தெருவில், பெண்கள் உடற்பயிற்சி கூடம் உள்ளது. இங்குள்ள உபகரணங்கள் மிகவும் சேதமடைந்து, மோசமான நிலையில் இருப்பதாக, அங்கு வரும் பெண்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பயிற்சி கூடத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் யோகா மையம் அமைக்க, மாநகராட்சி சார்பில், 20.40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி