உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டிவோல்ட் எலக்ட்ரிக் நிறுவன ஷோரூம் மாதவரத்தில் திறப்பு

டிவோல்ட் எலக்ட்ரிக் நிறுவன ஷோரூம் மாதவரத்தில் திறப்பு

சென்னை'டிவோல்ட் எலக்ட்ரிக்' நிறுவனம், அதன் முதல் விற்பனை மையத்தை, மாதவரம் பகுதியில் துவக்கியுள்ளது.இது, சென்னையை சேர்ந்த 'மோன்ட்ரா எலக்ட்ரிக்' நிறுவனத்தின் மின்சார இலகு ரக வர்த்தக வாகன பிரிவாகும்.இந்த விற்பனை மையம், 'டி.வி.எஸ்., மொபிலிட்டி சொல்யூஷன்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து துவக்கப்பட்டுள்ளது. இது, டிவோல்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை மையம் ஆகும்.'டி.வி.எஸ்., மொபிலிட்டி சொல்யூஷன்ஸ்' நிறுவன தலைமை செயல் அதிகாரி மது ரகுநாத் மற்றும் இதர அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் முன்னிலையில், டிவோல்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சஜு நாயர், விற்பனை மையத்தை துவக்கி வைத்தார்.இங்கு, வாகன விற்பனை, பராமரிப்பு, உதிரிபாகங்கள் மற்றும் சார்ஜிங் நிலையம் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன.தற்போது, டிவோல்ட் நிறுவனத்தின், 'இவியேட்டர்' என்ற மின்சார இலகு ரக வர்த்தக வாகனம் விற்பனையில் உள்ள நிலையில், இதன் முன்பதிவு துவக்கப்பட்டுள்ளது.இந்த வாகனம், ஒரு சார்ஜில், 171 கி.மீ., வரை பயணிக்கும். 1.70 டன் எடை வரை இதனால் சுமக்க முடியும்.'முருகப்பா' குழும நிறுவனமான மோன்ட்ரா எலக்ட்ரிக் நிறுவனம், இலகு ரக, நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் என, ஐந்து பிரிவுகளில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.இந்த நிறுவனம், 2020 முதல் சென்னையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை