உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டிஜிட்டல் கட்டண சேவை சி.யு.பி.,க்கு விருது

டிஜிட்டல் கட்டண சேவை சி.யு.பி.,க்கு விருது

சென்னை, சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான என்.காமகோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இருந்து, 'டிஜிட்டல் பேமென்ட்ஸ்' விருதை பெற்றார். இந்த விருது, இம்மாதம் 18ம் தேதி, டில்லி விஞ்ஞான் பவனில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.தனியார் துறை வங்கிகளில், இரண்டாம் இடத்திற்கான விருதை, சிட்டி யூனியன் வங்கி பெற்றுள்ளது. டிஜிட்டல் பேமென்ட்சை ஊக்குவிப்பதில், வங்கிகள் மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்த, புதுமையான மற்றும் முன்மாதிரியான பணிகளை அங்கீகரிக்க, நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை, 'டிஜிட்டல் பேமென்ட்ஸ் விருதுகளை' வழங்குகிறது. கடந்த, 2024 - 25ல் ஒட்டுமொத்த டிஜிட்டல் கட்டண செயல் திறனுக்காக, சிட்டி யூனியன் வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தியாவின் பழமையான, தனியார் துறை வங்கியான சிட்டி யூனியன் வங்கி, தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது.இந்த வங்கிக்கு நாடு முழுதும், 880 கிளைகள், 1,767 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. கடந்த மார்ச் நிலவரப்படி, வங்கியின் மொத்த வணிகம், 1.16 லட்சம் கோடி ரூபாய். கடந்த நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம், 1,124 கோடி ரூபாயாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை