உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாம்பரம் இந்தியன் ஸ்கேன் மையத்தில் டிஜிட்டல் பெட் சி.டி., ஸ்கேன் வசதி

தாம்பரம் இந்தியன் ஸ்கேன் மையத்தில் டிஜிட்டல் பெட் சி.டி., ஸ்கேன் வசதி

சென்னை,தாம்பரத்தில் உள்ள இந்தியன் ஸ்கேன் மையத்தில், புற்றுநோயை கண்டறியும் டிஜிட்டல் பெட் சி.டி., ஸ்கேன் வசதி துவக்கப்பட்டுள்ளது.தென்சென்னையில், 25 ஆண்டுகளாக சேவையாற்றி வரும், இந்தியன் ஸ்கேன் நோயறிதல் மையத்தில், புற்றுநோயை கண்டறியும் டிஜிட்டல் பெட் சி.டி., ஸ்கேன் வசதி நேற்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இந்நிகழ்வில் முக்கிய மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று, மையத்தின் முன்னேற்றத்தை வரவேற்றனர். மூத்த மயக்க மருந்து நிபுணரும், இந்திய மருத்துவ சங்க முன்னாள் மாநிலத் தலைவருமான டாக்டர் ராகவேலு, நரம்பியல் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் சங்கர நாராயணன், மருத்துவ சட்ட நிபுணர் டாக்டர் ரவிசங்கர், குமார்ஸ் ஹெல்த்கேர் நிறுவனர் சரவணகுமார் உள்ளிட்டோர், டிஜிட்டல் பெட் சி.டி., ஸ்கேனரை திறந்து வைத்தனர்.மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு முதல் முதலாக ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் துல்லியமான படங்கள் கிடைத்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ