உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணுக்கு தொல்லை தி.மு.க., நிர்வாகி கைது

பெண்ணுக்கு தொல்லை தி.மு.க., நிர்வாகி கைது

கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டம், பெருமாட்டுநல்லுாரில் வசிப்பவர் பாஸ்கர், 38. இவர், அப்பகுதி தி.மு.க., கிளைச் செயலர். இவரின் மனைவி, ஒன்பதாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர்.பாஸ்கர், வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும், கணவனை இழந்த பெண்ணை, மூன்று மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், இதை வெளியில் யாரிடமும் சொன்னால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.இதனால் பாதிக்கப்பட்ட அவர், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில், நேற்று புகார் அளித்தார். அதன்படி, வழக்கு பதிவு செய்த போலீசார், பாஸ்கரை கைது செய்து, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை