உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வளசரவாக்கம் நீர்ப்பிடிப்பு பகுதியில் ரூ.99 லட்சம் மதிப்பில் வடிகால்வாய்

வளசரவாக்கம் நீர்ப்பிடிப்பு பகுதியில் ரூ.99 லட்சம் மதிப்பில் வடிகால்வாய்

வளசரவாக்கம், வளசரவாக்கம் மண்டலம், எஸ்.வி.எஸ்., நகரில் வளசரவாக்கம் ஏரி இருந்தது. ஆக்கிரமிப்புகளால் அழிந்த ஏரியின் மிஞ்சிய நீர்ப்பிடிப்பு பகுதி, சமீபத்தில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.மழைக்காலத்தில் இந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைநீர் தேங்கி, எஸ்.வி.எஸ்., நகர் பிரதான சாலை மற்றும் அம்பேத்கர் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படும்.அப்போது, அம்பேத்கர் சாலையில் மின் மோட்டார் அமைத்து, குழாய் வாயிலாக பி.என்.ராமமூர்த்தி தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் வெளியேற்றப்படும்.அங்கிருந்து, பெத்தானியா நகர், சவுத்ரி நகர் மற்றும் திருவள்ளுவர் சாலை வழியாக அடையாறுக்கு செல்லும்.இதில், பி.என்.ராமமூர்த்தி நகரில் உள்ள மழைநீர் வடிகால்வாய் சேதமடைந்துள்ளது. இதனால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் நிலவியது.இதையடுத்து, 99 லட்சம் ரூபாய் செலவில், 300 மீட்டர் துாரத்திற்கு பழைய மழைநீர் வடிகால்வாயை இடித்து விட்டு, புதிதாக அமைக்கும் பணி நடந்து வருகிறது.இந்த மழைநீர் வடிகால்வாய் பயன்பாட்டிற்கு வந்தபின், வளசரவாக்கம் நீர்ப்பிடிப்பு பகுதியில் தேங்கும் மழைநீரை விரைவாக வெளியேற்ற முடியும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி