மேலும் செய்திகள்
குழாய் உடைந்து சாலையில் வழிந்தோடி வீணான குடிநீர்
15-May-2025
வளசரவாக்கம், வளசரவாக்கம், போரூர், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், ஒவ்வொரு பருவமழைக்கும் வெள்ளம் தேங்கி பாதிப்பு ஏற்படும். இதற்கு காரணம், மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததே.இதை தடுக்க, சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதியான வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 143வது வார்டு முதல் 155 வார்டு வரை, மழைநீர் வடிகால்வாய் கட்ட முடிவு செய்யப்பட்டது.அதன்படி, 175 இடங்களில் 70 கோடி ரூபாய்க்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு, பணிகள் துவங்கி உள்ளன.குறிப்பாக, தண்ணீர் தேங்கி அதிக பாதிப்பு ஏற்படுத்தும் ராமாபுரம் திருவள்ளுவர் சாலையில், நந்தம்பாக்கம் கால்வாயை இணைக்கும் வகையில், எட்டு கோடி ரூபாய்க்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படுகிறது.
15-May-2025