பயன்பாட்டிற்கு வந்தது குடிநீர் இயந்திரம்
சென்னை: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, மெரினா அணுகு சாலையில் செயல்படாமல் முடங்கிய சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மெரினா கடற்கரைக்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும், சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். அவர்களின் வசதிக்காக, நான்கு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம், சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டது. இவை அனைத்தும் பயன்பாடில்லாததா ல், பயணியர் வேறு வழியின்றி தனியாரிடம் கூடுதல் விலைக்கு பாட்டில் குடிநீரை வாங்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் பழுது நீக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.