உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இளைஞர்களுக்கு ட்ரோன் பயிற்சி

இளைஞர்களுக்கு ட்ரோன் பயிற்சி

சென்னை, இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், ஈக்காட்டுதாங்கலில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில், மூன்று நாட்களுக்கு, 'ட்ரோன் ஆப்பரேட்டர்' பயிற்சி வழங்கப்படுகிறது.வரும் 23 முதல் 25ம் தேதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை இந்த பயிற்சி நடக்கிறது.இதில், ட்ரோன் வகைகள் மற்றும் பராமரிப்பு, இயக்க விதிகள், விமான அடிப்படை கண்ணோட்டம், அவசரக்குறிப்புகள், சிமுலேட்டர், நடைமுறை பயிற்சிகள், சென்சார் கண்காணிப்பு, மேம்பிங் ஒருங்கிணைப்பு, ரேடியோ டெலிபோனிக் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் கற்றுத்தந்து, அரசு சான்றிதழ் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு முடித்த, 18 வயதுக்கு மேற்பட்டோர் சேரலாம். வெளியூரில் இருந்து வருவோருக்கு, குறைந்த வாடகையில் 'ஏசி' அறை வசதி தரப்படும். விபரங்களை, 'www.edtn.in' என்ற இணையதளத்தின் வாயிலாகவோ, 86681 02600, 70101 43022 ஆகிய மொபைல் போன் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, தமிழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் நிறுவன இயக்குனர் அம்பலவாணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை