உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏகாம்பரநாதர் பள்ளி கட்டடம் வரும் 27ல் திறப்பு

ஏகாம்பரநாதர் பள்ளி கட்டடம் வரும் 27ல் திறப்பு

சென்னை, கீழ்ப்பாக்கம், ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்களின் இறுதிக்கட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது: ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 2021ல் 750 மாணவர்களுடன் துவங்கப்பட்ட மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், தற்போது 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.இம்மாணவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் 11.15 கோடி ரூபாயில் மூன்று தளங்களில், 32 வகுப்பறைகள், ஆசிரியர் ஓய்வறைகள், ஐந்து ஆய்வுக் கூடங்கள் மற்றும் சூளைமேடில் செயல்பட்டு வரும் அஞ்சுகம் தொடக்கப் பள்ளிக்கு 2 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தையும், வரும், 27ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்.அறநிலையத்துறை கோவில்கள் சார்பில் நடத்தப்படும் 25 பள்ளிகள் மற்றும் ஒரு பாலிடெக்னிக் கல்லுாரி உட்பட 10 கல்லுாரிகளில் 22,455 மாணவ - மாணவியர் கல்வி பயில்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை