உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 806 வெளிநாட்டுமது பாட்டில்கள் அழிப்பு

806 வெளிநாட்டுமது பாட்டில்கள் அழிப்பு

கொடுங்கையூர், பாரிமுனை, பர்மா பஜாரில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, ஜேக் டேனியல், ரெமி மார்டின் உட்பட வெளிநாட்டு ரக மதுபாட்டில்களை, 2021ல், பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.வழக்கானது, ஜார்ஜ் டவுன் 8வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன்படி நடுவர் தாமோதரன், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிக்குமாறு உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட, 806 வெளிநாட்டு ரக மதுபாட்டில்களை, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் வைத்து அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் தலைமையில், மாநகராட்சி, காவல் துறையினர் முன்னிலையில், உயர் ரக மதுபானங்களை கீழே ஊற்றியும், மதுபாட்டில்களை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சல்லி சல்லியாக நொறுக்கினர்.செய்தி:பாபுபடம்: லட்சுமணன் சென்னை கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில் நீதிமன்ற உத்தரவுபடி பூக்கடை மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் முன்னிலையில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ