வசந்த் அண்ட் கோவின் கண்காட்சி மற்றும் விற்பனை
சென்னை, வசந்த் அண்டு கோ' மற்றும் உலகத்தர வீட்டு உபயோகப் பொருட்களின் தயாரிப்பாளர்கள் இணைந்து சிறப்பு சலுகைகளுடன், சென்னை வர்த்தக மையத்தில் நடத்தி வரும், வீட்டு உபயோகப் பொருட்களின் மாபெரும் கண்காட்சி மற்றும் விற்பனை நாளை நிறைவு பெறுகிறது.பொதுமக்கள் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை அனுமதிக்கப்படுவர். இந்த கண்காட்சியில் 'ஏசி, பிரிஜ், வாஷிங் மிஷின், மைக்ரோவேவ் ஓவன், லேப்டாப், மொபைல் போன்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், சிறப்புச் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில், 'ஏசி'-களுக்கு 7,000 ரூபாய் வரை 'எக்ஸ்சேஞ்ச்' சலுகையும்; குறிப்பிட்ட சில 'ஏசி'களுக்கு, 5,000 ரூபாய் வரை, 'கேஷ்பேக் சலுகைகளும்; சுலபத் தவணை முறையில் பணம் செலுத்துதல் என, பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.மேலும், ஏசி வாங்குபவர்களுக்கு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல், பம்பர் பரிசாக 5,000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு, 'ஸ்லோகன் போட்டி' வாயிலாக, தினமும் ஒரு சவரன் தங்கம் வெல்லும் வாய்ப்புகளும் உள்ளது என, வசந்த் அண்ட கோ நிறுவனம் அறிவித்துள்ளது.